‘தளபதி 63’-ல கலக்குறோம் - காமெடி நடிகர் விவேக் ஆர்வம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது குறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Actor Vivekh shares acting experience with Vijay after 10 years in Thalapathy 63

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘குருவி’ படத்திற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது குறித்து காமெடி நடிகர் விவேக் Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

‘தளபதி 63’ பேசிய அவர், அண்ணா ரொம்ப சந்தோஷம்ண்ணா உங்களோட சேர்ந்தது, கலக்குவோம் ண்ணா என்றார் விஜய், ரசிகர்கள போல் நானும் அந்த படத்துக்கு வெயிட்டிங் என விஜய் பாணியிலேயே பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் ‘வெள்ளை பூக்கள்’ திரைப்படம் குறித்த தகவல்களையும் நடிகர் விவேக் பகிர்ந்துக் கொண்டார்.

‘தளபதி 63’-ல கலக்குறோம் - காமெடி நடிகர் விவேக் ஆர்வம் வீடியோ