பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக் . சமூக கருத்துக்களுடன் கூடிய இவரது காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'வெள்ளை பூக்கள்' எனும் படத்தில் முதன்மை வேடம் ஏற்று நடித்துள்ளார் விவேக்.
![Actor Vivekh starrer Vellai Pookal's story revealed Actor Vivekh starrer Vellai Pookal's story revealed](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/actor-vivekh-starrer-vellai-pookals-story-revealed-photos-pictures-stills.jpg)
இந்த படத்தில் அவருடன் சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா அண்மையில் வெளியிட்டார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை சுருக்கம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், தமிழ்நாட்டிலிருந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ருத்ரன், அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனுடன் நேரம் செலவிட முடிவு செய்கிறார். அங்கு தனது மருமகளை சந்திக்கிறார். மேலும் அங்கு பல்வேறு வகையான சுவாரஸ்யமான மனிதர்களை சந்தித்து அவர்களுடன் நண்பராகிறார். வெளித்தோற்றத்தில் வரவேற்புமிக்க அமைதியான இடமாக தோன்றும் வசிப்பிடத்தில் திடீரென ருத்ரனை சுற்றியுள்ள மக்கள் மாயமாகி இறந்துவிட்டதாக கருதப்படுகின்றது.
தொடர் கொலைகாரனை அடையாளம் காண போலீஸ் மூளையை பயன்படுத்தி தனது சொந்த விசாரணையைத் தொடங்குகிறார் ருத்ரன். கொலையாளி யார் ? கொலைகளுக்கான காரணம் என்ன? என பல புதிர்களை, விடைகளை ருத்ரன் வெளிக்கொண்டுவந்தாரா என்பேத வெள்ளைப்பூக்கள் படத்தின் சுவாரஸ்யமிக்க கதை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.