ரிலீசுக்கு ரெடியான தனுஷின் ரொமாண்டிக் படம் - ரசிகர்கள் உற்சாகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhanush's Enai Nokki Paayum Thotta film Trailer, release announcement will be soon

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீண்ட வருடங்களாக ஷூட்டிங்கில் இருந்தது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில காரணங்களால் படத்தின் பணிகள் தாமதமாகின.

இந்நிலையில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை தயாரிப்பாளர் மதன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டிரைலர் ரெடியாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கான பணிகள் நடைபெறுகிறது. அனைத்தும் நல்லபடியாக அமைந்தால் ஏப்ரலில் திரைப்படம் வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைதொடர்ந்து ‘வடசென்னை 2’, ‘அசுரன்’, இயக்குநர் துரை செந்தில் குமாரின் திரைப்படம் என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.