புதுப்பேட்டைக்கு பின் தனுஷுடன் இணையும் சினேகா; புதுப்படம் ஆரம்பம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்  பணிகள் தொடங்கியது.

Dhanush kick starts his next with Durai Senthil Kumar under Satya Jyothi Films Production

‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை ‘கொடி’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். ‘தொடரி’ திரைப்படத்திற்கு பின் இரண்டாவது முறையாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்-தனுஷ் கூட்டணி அமைத்துள்ளனர்.

‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்கு பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் குற்றாலத்தில் பூஜையுடன் இன்று தொடங்கியது.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திர்கு விவேக்-மெர்வின் இணை இசையமைக்கவுள்ளனர். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.