தனுஷின் பீரியட் படம் கைவிடப்பட்டதா? உண்மை விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வந்த சரித்திர கால திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை படத் தயாரிப்புக் குழு மறுத்துள்ளது.

Dhanush's next directorial is not dropped, Thenandal Films Clarifies

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இதனிடையே, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சரித்திர கால திரைப்படம் ஒன்றை தனுஷ் இயக்கி வந்தார். தற்போது இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிந்த நிலையில், இது குறித்து படத் தயாரிப்புக் குழுவை நாம் தொடர்புக் கொண்டபோது, இந்த தகவலை அவர்கள் மறுத்துவிட்டனர்.

மேலும், பி.ஆர்.ஓ விஜய் முரளியிடம் கேட்டபோது, தனுஷ் இயக்கும் திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படும் தகவலில் துளியும் உண்மையில்லை. இது போன்ற பொய்யான தகவலை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் தனுஷ், அதிதி ராவ் ஹிதாரி, நாகார்ஜுனா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். தனுஷ் முதன் முறையாக இயக்கிய பா.பாண்டி திரைப்படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.