ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்துக் கொண்ட போட்டியாளர் சனா கான் ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிந்தியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் சனா கான். இவர் தமிழில் நடிகர் சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘ஆயிரம் விளக்கு’, ‘பயணம்’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் சனா கான் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் இணைந்து நடித்த ராம்லீலா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அங் லகா தே ரே’ பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சனா கானின் நண்பர் கோரியோகிராபர் மெல்வின் லூயிஸ் எடுத்த இந்த டான்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.