பெஸ்ட் கோ-ஸ்டார் சிம்புவா? தனுஷா? - நடிகை சோனியா அகர்வால் ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘7ஜி ரெயின்போ காலனி’, ‘காதல் கொண்டேன்’, ‘கோவில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சோனியா அகர்வால்.

Simbu or Dhanush, who is comfortable costar- Sonia Aggarwal opens up

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் விஜய் நடித்துள்ள ‘தடம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் இன்று மார்ச்.1ம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலயில், Behindwoods தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த நடிகை சோனியா அகர்வால் தன்னுடன் பணியாற்றிய ஹீரோக்கள் சிம்பு, தனுஷ், விஜய் ஆகியோர் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும், இயக்குநர் செல்வாராகவனிடம் நடிப்புக் கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

நடிகர் சிம்பு மற்றும் தனுஷுடன் பணியாற்றியது குறித்து பேசிய சோனியா அகர்வால், இரண்டு பேரும் ஷூட்டிங் சமயத்தில் உதவியாக இருந்ததாகவும், குடும்பமாக மாறியதால் தனுஷுடன் இருப்பது கம்ஃபர்டபுளாக இருந்தது. அதேபோல் சிம்புவும், ஒரு பெரிய நடிகரின் மகன் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல் உதவியாக இருந்தார் என்றார்.

மேலும், தனது முதல் ஆசானான, இயக்குநர் செல்வராகவன் குறித்து பேசுகையில், அவரிடம் தான் நடிப்புக் கற்றுக் கொண்டேன். மொழியே தெரியாத போதும் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் என்ன எக்ஸ்பிரெஷன் தேவையோ அதை என்னிடம் இருந்து வர வைத்தார். நிறைய டேக்குகள் எடுத்தால் கோபப்படுவார், ரொம்ப ஸ்ட்ரிக்டான டீச்சர் அவர் என கூறினார்.

பெஸ்ட் கோ-ஸ்டார் சிம்புவா? தனுஷா? - நடிகை சோனியா அகர்வால் ஓபன் டாக் வீடியோ