சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் - ரசிகர்கள் விரும்பிய சூப்பர் யூத் காம்போ இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK17 திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Sivakarthikeyan-Anirudh-Vignesh Shivn will come together for SK17 under Lyca Production

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’, நடிகர் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படங்களை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதனிடையே, அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK17 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன் முறையாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

மிகுந்த பொருட் செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஜூலை மாதம் தொடங்கவிருப்பதகாவும், 2020-ல் திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr லோக்கல்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது தவிர ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் SK14 திரைப்படமும், ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் SK15 திரைப்படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளது.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK16 திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் SK17 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், திரைப்படத்திற்காக இணைந்துள்ள இவர்களது கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.