சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் குறித்த முக்கிய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ளார்.

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr லோக்கல்' திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘வேலைக்காரன்’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்திருப்பதாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘Mr லோக்கல் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்தது. இயக்குநர் ராஜேஷுக்கு நன்றி, சிவகார்த்திகேயன், நயன்தாரா உடனான வெற்றிப்படத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள Mr லோக்கல் திரைப்படம் உழைப்பாளர் தினத்தையொட்டி வரும் மே.1ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Finished my dubbing for #MrLocal Thks @rajeshmdirector was a fun ride looking forward to a successful film @Siva_Kartikeyan and gorgeous #nayantara pic.twitter.com/XDlkL1CZMi
— Radikaa Sarathkumar (@realradikaa) March 19, 2019