சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கனா’ பட ஹீரோயின் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் SK16 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் திரைப்படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
SK16 திரைப்படத்தின் ஷூட்டிங் ஏப்.22ம் தேதி முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும், படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.