தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் சேட்டிலை உரிமத்தை பிரபல டிவி நிறுவனமான சன் டிவி கைப்பற்றியுள்ளது.

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல டிவி நிறுவனமான சன் டிவி கைப்பற்றியுள்ளது.
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
.@SunTV buys the satellite rights of #Thalapathy63#Thalapathy63WithSunTV
— Sun TV (@SunTV) March 19, 2019