நடிகர் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் K13 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் த்ரில்லர் படமான ‘கே 13’ திரைப்படத்தில் எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.
K13 திரைப்படத்தின் டீசரை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்தர், காயத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் மனநலம் சார்ந்த மிஸ்டரிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசரில் வரும் விறுவிறுப்பான காட்சிகளும், வசனங்களும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
எனக்கு பேய் மேலலாம் நம்பிக்கை இல்ல: அனிருத் வெளியிட்ட த்ரில்லர் பட டீசர் வீடியோ