தனது ஷார்ட் ஃபிலிம் டீமுடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

Sivakarthikeyan share his memories with PS Mithran and George C williams in hero

இதனையடுத்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இமைக்கிறார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இயக்குநர் மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அவர், என்னுடைய அடுத்த படமான 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

 

திறமைசாலிகளான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மற்றும் மித்ரன் ஆகியோருடன் இணைவதில் மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன் ஷார்ட் பிலிமில் ஒன்றாக பணிபுரிந்தோம். தற்போது திரைப்படத்துக்காக இணைந்துள்ளோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.