விஜய் சேதுபதி ஸ்டைலில் புதுப்பட டைட்டிலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan’s next Productions is titled as Nenjamundu Nermaiyundu Odu Raja

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டைட்டிலை சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் பாணியில், ரியோ ராஜ் நடிக்கும் திரைப்படத்திற்கான டைட்டில் அமைந்த கதையை கூறியுள்ளனர்.

இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி ஸ்டைலில் புதுப்பட டைட்டிலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.! வீடியோ