சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் தேவரகொண்டாவின் படங்களின் ஆச்சரியமான ஒற்றுமை என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் வெளியான 'கனா' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan and vijay devarkonda titled as 'Hero'

அதனைத் தொடர்ந்து 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'எஸ்கே15' என அழைக்கப்படும் இந்த படத்துக்கு 'ஹீரோ' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 'காக்கா முட்டை' படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கும் 'ஹீரோ' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.

விஜய் தேவரகொண்டா தற்போது பரத் கம்மா இயக்கத்தில் 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'கீதா கோவிந்தம்' படத்துக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.