நம்மை தடுப்பார் யாரோ ? - அவெஞ்சர்ஸ் தமிழ் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் மார்வெல் ஆன்தம் இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்தியாவில் வெளியாகும் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி, தமிழ், மொழிகளில் மார்வெல் ஆன்தம் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

A.R.Rahman's Marvel Anthem for Avengers Endgame released by Vijay Sethupathi and Andrea

அதன் படி ஹிந்தியில் ஏப்ரல் 1 ஆம் தேதி  இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இதன் தமிழ் வெர்ஷனை ஏ.ஆர்.ரஹ்மான்,விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியீட்டின் போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கு விஜய்சேதுபதியும் ஆண்ட்ரியாவும் டப்பிங் பேசியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்மை தடுப்பார் யாரோ ? - அவெஞ்சர்ஸ் தமிழ் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் மார்வெல் ஆன்தம் இதோ ! வீடியோ