ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு விஜய் தேவரகொண்டா தந்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இடம் பெற்ற 'இன்கேம் இன்கேம் காவாளே' பாடல் அமோக வெற்றி பெற்றது.

Vijay Devarakonda Gives surprise to Rashmika for her birthday in Dear Comrade

அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடித்துவரும் படம் 'டியர் காம்ரேட்'. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பரத் கம்மா இயக்கிவருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸ் தரவிருப்பதாக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, மற்றவர்கள் நாளை தெரிந்து கொள்ளட்டும், தனக்கு மட்டும் அந்த சர்ப்ரைஸ் சொல்லுமாறு ராஷ்மிகா கேட்டார். இந்நிலையில் இன்று இதுகுறித்து ட்வீட் செய்த விஜய் தேவரகொண்டா, நாங்கள் சும்மா சொன்னோம். அப்சட் ஆகாத. படப்பிடிப்பு தளத்தில் நீ தான் எங்களது மகிழ்ச்சி. உனது நடிப்பின் மூலம் அழவும், மற்ற அனைத்து நேரங்களிலும் சிிரிக்கவும்  வைப்பவள் நீ.

ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11.11 மணிக்கு வெளியாகும் முதல் பாடலை உனக்கு டெடிகேட் செய்கிறோம். என்றார்.