'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து'... 'இன்னும் 5 நாட்களில்'... 'அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ, "உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய உள்ளோம். 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தடுப்பு மருந்து பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மூன்றாம் கட்ட சோதனை நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கிய நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் தற்போது இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது.