'உயிருக்குப் போராடுபவர்களையும் குணப்படுத்தும் புதிய மருந்து'... 'கொரோனா நோயாளிகள் விரைவில் மீள்வதாக மருத்துவர்கள் வியப்பு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஆர்எல்எப்-100 எனும் மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளையும் குணப்படுத்த உதவுவதாக கூறப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முதன்முதலாக ஆர்எல்எப்-100 மருந்தை, தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதித்துள்ளனர். இந்த மருந்து அளிக்கப்பட்ட சில நாட்களில் அவர்கள் நுரையீரல் பாதிப்பிலிருந்து மிக வேகமாக குணமடையத் தொடங்கியதைப் பார்த்து மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.
ஆர்எல்எப்-100 எனும் இந்த அவிப்டாடில் (Aviptadil) மருந்து என்பது வாஸ்கோ இன்டெஸ்டினல் போலிபெப்டைட் (விஐபி) கலவையைக் கொண்டது. இது நுரையீரலில் அழற்சி, அடைப்பு போன்றவற்றை நீக்கவல்லது. நியூரோ ஆர்எக்ஸ் மற்றும் ரிலீப் தெரப்படிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளன. இந்த அவிப்டாடில் மருந்தை உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பும் அனுமதியளித்துள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் குணப்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் ஆர்எல்எப்-100 எனும் மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த மருந்தை அளிக்கும்போது நுரையீரல் தொடர்பான பாதிப்பிலிருந்து கொரோனா நோயாளிகள் மிக விரைவாக மீள்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நியூரோஆர்எக்ஸ், ரிலீப் தெரப்பாட்டிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா நோயாளிகள் நுரையீரலில் இருக்கும் அடைப்புகளை, அழற்சியை அவிப்டாடில் மருந்து குணப்படுத்துகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவிர பாதிப்புக்கு ஆளாகி வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த 15க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு அவிப்டாடில் மருந்தை அளித்து பரிசோதித்தபோது, 4 நாட்களில் நுரையீரலின் நிலையில் முன்னேற்றம் அடைந்து அவர்கள் வென்டிலேட்டர் தேவையிலிருந்து வெளியே வந்துள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, நுரையீரலில் இருக்கும் பாதிப்பை வேகமாக இந்த மருந்து குணப்படுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவையும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக 50 சதவீதம் அல்லது அதற்கும் மேல் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
