மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள்.. தலைவர்கள் புகழாராம்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Siva Sankar | Feb 24, 2019 11:01 AM
மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி பல தலைவர்களும் அவரை நினைவுகூர்ந்தனர்.
இதனையொட்டி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கோரிக்கை மனு தருவது போன்ற புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் முதல் முறையாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பிரதமர் மோடி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இந்த பிறந்த நாளில் அவரைப் பற்றி நினைவுகூரும்போது, தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும்; அவர் கொண்டு வந்த திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயனடைந்துள்ளனர் என்று தனது அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அதற்கும் முன்பே, இன்று காலை ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இதேபோல், சென்னை ராயப்பேட்டையின் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.