கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தோடு அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு… என்ன விசேஷம்.? – VIRAL PICS

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Vinothkumar K | Jun 01, 2022 03:36 PM

தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்தின் சமீபத்தைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

Anbumanai Ramadoss with vijayakanth viral pic

Also Read | “தோனி என்ன ப்ளேயிங் 11-ல இருந்து தூக்கிட்டாரு.. உடனே ரிட்டயர்ட் ஆகிடலாம்னு நெனச்சேன்”.. அப்போ சச்சின் சொன்ன அந்த அட்வைஸ்.. பல வருசம் கழிச்சு சேவாக் சொன்ன சீக்ரெட்..!

சினிமா to அரசியல்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக 1980 கள் முதல் 2000 வர கலக்கியவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அந்த சங்கத்தின் கடனை அடைத்ததால் நடிகர்களால் பாசமுடன் கேப்டன் என அழைக்கபட்டவர். 2004 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியைத் தொடங்கி 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

Anbumanai Ramadoss with vijayakanth viral pic

உடல்நலம்…

சமீபத்தைய ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக 2014 ஆம் ஆண்டு  சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.  பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். உடல்நிலைக் காரணமாக இப்போது வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் கேப்டன் விஜயகாந்த். அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Anbumanai Ramadoss with vijayakanth viral pic

ஓய்வு….

தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாக கடைசியாக விருதகிரி படத்தில் நடித்தார். அந்த படத்தை அவரே இயக்கவும் செய்தார். அதுபோல கட்சி சார்ந்த பணிகளிலும் அவர் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை. தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

Anbumanai Ramadoss with vijayakanth viral pic

வைரல் ஃபோட்டோ…

இந்நிலையில் தற்போது விஜயகாந்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. புதிதாக பாமக தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் மரியாதை நிமித்தமாக விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. கேப்டன் விஜயகாந்த் மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார். இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Also Read | வாட்சாப்பில் லட்ச கணக்கில் பணம் கேட்ட மகள்.. அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "குட்நைட்" மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

Tags : #ANBUMANAI RAMADOSS #VIJAYAKANTH #அன்புமணி ராமதாஸ் #கேப்டன் விஜயகாந்த்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anbumanai Ramadoss with vijayakanth viral pic | Tamil Nadu News.