'ஐயோ, இது அவர் இல்ல'... 'நாங்க நம்ப மாட்டோம், சென்னை விமான நிலையத்தில் கதறிய ரசிகர்கள்'... நெஞ்சை உருக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு சென்னை விமானநிலையம் வந்த விஜயகாந்த்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

அரசியல் களத்தில் சூறாவளியாக இருந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்திற்கு தைராய்டு பிரச்சனை , தொண்டையில் தொற்று, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் அவரது ஆரோக்கியம் குன்றியது. அவரது நடை தளர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இது அவரது கட்சிக்காரர்களைத் தாண்டி தமிழக மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது.
தனது உடல் நலக் கோளாறுகளுக்காகச் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் விஜயகாந்த். சென்னையிலும், அமெரிக்காவிலும், சிகிச்சைகளைத் தொடர்ந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக இன்று துபாய் செல்கிறார். லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைப்பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காகத் துபாய் வருகிறார்.
அங்கு விஜயகாந்த்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின், சிகிச்சையைத் துபாயில் அளிப்பதா லண்டன் அழைத்துச் செல்வதா என முடிவு செய்யப்பட உள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையிலிருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் விஜயகாந்த்துடன் அவரது இளைய மகன் சண்முகப்பாண்டியனும், உதவியாளர்கள் இருவரும் செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், கம்பீரமாக அரசியல் களத்தில் செயலாற்றி வந்த விஜயகாந்த்தை வீல் சேரில் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியில் நொறுங்கிப் போனார்கள். எங்கள் கண்ணையே எங்களால் நம்ப முடியவில்லை என்றும் அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
