“தோனி என்ன ப்ளேயிங் 11-ல இருந்து தூக்கிட்டாரு.. உடனே ரிட்டயர்ட் ஆகிடலாம்னு நெனச்சேன்”.. அப்போ சச்சின் சொன்ன அந்த அட்வைஸ்.. பல வருசம் கழிச்சு சேவாக் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சச்சினின் அறிவுரையால் மாற்றியதாக சேவாக பகிர்ந்துள்ளார்.
Also Read | ‘செம சர்ஃப்ரைஸ்’.. IPL கப் ஜெயிச்ச குஜராத் 6-வது இடம்.. RCB முதலிடம்.. வெளியான ‘வேறலெவல்’ தகவல்..!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இப்போது வரை அதிரடி கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் உள்ளது. களத்தில் இறங்கினாலே சிக்சர், பவுண்டரி என விளாசி எதிரணியை திணறடித்து விடுவார். இந்த சூழலில், கடந்த, 2008-ம் ஆண்டே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக சேவாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சேவாக், ‘2008-ம் ஆண்டு நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஓய்வு பற்றிய கேள்வி என் மனதில் எழுந்தது. நான் டெஸ்ட் தொடரில் மீண்டும் 150 ரன்கள் எடுத்தேன். ஆனால் ஒருநாள் போட்டிகளில் என்னால் ரன்கள் அடிக்க முடியவில்லை. அதனால் என்னை ஆடும் லெவனில் இருந்து கேப்டன் தோனி நீக்கினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடலாம் என்று நினைத்தேன்.
அப்போது, சச்சின் டெண்டுல்கர் என்னை தடுத்து நிறுத்தினார். “இது உங்கள் வாழ்க்கையின் மோசமான கட்டம். காத்திருங்கள், இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு நன்றாக யோசித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யுங்கள்” என சச்சின் கூறினார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நான் எனது ஓய்வை அறிவிக்கவில்லை’ என சேவாக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இரண்டு வகையான வீரர்கள் இருக்கிறார்கள், ஒன்று சவால்களை விரும்புபவர்கள். அவர்களில் விராட் கோலி ஒருவர். எல்லா விமர்சனங்களையும் அவர் கேட்கிறார், அவை தவறு என்று நிரூபிக்க ரன்களை அடித்து களத்தில் பதிலடி கொடுக்கிறார். இன்னொரு வகை, விமர்சனங்களால் பாதிக்கப்படாதவர்கள். ஏனென்றால் ஆட்டத்தின் முடிவில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். நான் அப்படிப்பட்ட வீரர். யார் என்னை விமர்சித்தாலும் நான் கவலைபட்டதில்லை. நன்றாக விளையாடி, ரன் குவித்துட்டு வீட்டிற்கு செல்ல விரும்பினேன்’ என சேவாக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நான்கு போட்டிகளில் சேவாக் 6, 33, 11, 14 என ரன்கள் எடுத்தார். அதனால் அப்போது ஆடும் லெவனில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்தில் சேவாக் மீண்டும் ஆடும் லெவனிற்கு திரும்பினார். அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து 7 ஆண்டுகள் இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.