'என்ன அடிச்சு தூக்கலாமா'...'தல' ஸ்டைலில் தெறிக்க விட்ட 'சூப்பர் கிங்ஸ் வீரர்'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 20, 2019 10:49 AM
ஐபிஎல் போட்டிகள் வந்துவிட்டால் போதும்,சென்னை அணி வீரர்களின் ட்விட்களுக்கும்,வீடியோகளுக்கும் பஞ்சம் இருக்காது.அதுவும் சினிமா வசனங்களை பேசி அவர்கள் போடும் ட்விட்கள் அதிரடியை கிளப்பும்.அந்த வகையில்,சென்னை அணியில் விளையாடி வரும் தென்னாப்ரிக்க சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பேசும் தமிழை ரசிப்பதற்கு,ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என கூறலாம்.

இம்ரான் தாஹிருக்கு சென்னை ரசிகர்கள் வைத்திருக்கும் செல்ல பெயர் பராசக்தி எக்ஸ்பிரஸ்.அதற்கு சுவையான காரணம் ஒன்றும் இருக்கிறது.போட்டியின் போது விக்கெட் மட்டும் எடுத்துவிட்டால் போதும்,உடனே மைதானத்தையே ஒரு ரவுண்டு ஓடி வந்து விடுவார்.இந்த காரணத்தினாலேயே ரசிகர்கள் அவரை அன்புடன் பராசக்தி எக்ஸ்பிரஸ் என அழைக்கிறார்கள்.
இதனிடையே 12 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது வரும் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் ''என் இனிய உடன்பிறப்புகளே நலமா? உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வரும் உங்கள் சகோதரன். அடிச்சு தூக்கலாமா? எடுடா வண்டிய, போடுடா விசில'' என இம்ரான் தாஹிர் ட்வீட் செய்துள்ளார்.மேலும் 'சென்னையில் உள்ள சகோதர சகோதரிகளே'என வீடியோவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Yen iniya udan pirapugaley nalama ? Ungal anaivaraiyum sandikka avaludan varum ungal sagotharan.adichu thookalama @ChennaiIPL #eduda vandiya poduda whistle pic.twitter.com/HGpWVVreoD
— Imran Tahir (@ImranTahirSA) March 19, 2019
