'இந்த ஐபிஎல்'க்கு என்ன பண்ண போறோம்...ஸ்வீட் சாப்பிட போறோம்'...வைரலாகும் மோஷன் போஸ்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 21, 2019 10:06 AM

ஐபிஎல் ஜுரம் வந்தாலும் வந்தது,சென்னை ரசிகர்கள் புது புது வீடியோகளை வெளியிட்டு தெறிக்க விட்டு வருகிறார்கள்.அந்த வகையில் பேட்ட’ பட ஸ்டைலில் தல தோனிடின் 3டி மோஷன் போஸ்டர் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.

Fan made peta 3D Motion Poster for Dhoni goes viral

வரும் சனிக்கிழமை தொடங்க இருக்கும் முதல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி,பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.சில நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற,சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில் தோனியைப் பார்ப்பதற்காகவே சுமார் 12,000 ரசிகர்கள் கூடினார்கள்.அந்த அளவிற்கு தோனியின் வெறித்தனமான ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள்.

இந்நிலையில்  ‘CSK பராக்’ என்ற தலைப்பில் ‘பேட்ட’ பட ஸ்டைலில் தோனிக்கு பிரத்யேகமான மோஷன் போஸ்டர் ஒன்றை அவரது ரசிகர் ஒருவர் உருவாகியுள்ளார்.பேட்ட மோஷன் போஸடரில் ரஜினியை எப்படி கெத்தாக கட்டினார்களோ அதே பாணியில் இந்த 3டி மோஷன் போஸ்டரை ரசிகர் ஒருவர் உருவாகியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.