'விமான சேவையை விரும்பும் மக்கள்'... '2 மாதங்களுக்குப் பின் எண்ணிக்கை அதிகரிப்பு'... 'இயல்புக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் விமானம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
![Lockdown Operations Slowly Returning To Normal At Chennai Airport Lockdown Operations Slowly Returning To Normal At Chennai Airport](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/lockdown-operations-slowly-returning-to-normal-at-chennai-airport.jpg)
சென்னையில் விமான சேவை தொடங்கிய போது வெளி மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 25 விமானங்கள் வருவதற்தே அனுமதி வழங்கப்பட்டது. அதிக கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு அதிக விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே சிக்கியிருந்த மக்கள் பொது போக்குவரத்துக்கு தடை, இ-பாஸ் நடைமுறை, அவசர நிலை போன்ற காரணங்களால் மாநிலத்திற்குள் செல்ல விமான சேவையை பெரிதும் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழு ஊரடங்கிலும் கூட சென்னை விமான நிலையம் விதிமுறைகள்படி தடையில்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மேலும் விமானம் மூலம் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகள் இ-பாஸாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் மட்டும் சென்னை விமான நிலையத்திற்கு 1,45,671 பேர் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தை விட 6.6 சதவீதம் அதிகமாகும்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)