ஐபிஎல் 2020: அதிகாரப்பூர்வ 'அறிவிப்பு' வெளியானது... எதையெல்லாம் 'மாத்தி' இருக்காங்க பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரசிகர்கள் ஆவலுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அதன்படி சுமார் 53 நாட்கள் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதி நடைபெறும். வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டிகள் அரை மணி நேரம் முன்னதாக சுமார் 7.30 மணிக்கு தொடங்கப்படும் என்றும், பிற்பகல் 4 மணிக்கு தொடங்கும் போட்டிகள் 3.30 மணிக்கு தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
NEWS: #VIVOIPL 2020 to commence on 19th September, final to be played on 10th November.
More details 👉 https://t.co/vpM45FAnUQ pic.twitter.com/KnE48kDW1i
— IndianPremierLeague (@IPL) August 2, 2020
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின் சென்னை அணிக்காக தோனி விளையாட இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.