'இப்போதைக்கு மேட்ச் நடக்குமான்னு தெரியல'... 'எனக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கு'... கிரிக்கெட் வீரர் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வந்ததிலிருந்து பலரது வாழ்க்கை என்பது தலைகீழாக மாறிவிட்டது. பொருளாதாரம் அடியோடு சரிந்து விட்டது. பலரும் என்ன செய்வது என தெரியாமல் கிடைத்த வேலைகளைச் செய்து பணத்தைச் சேமிக்கும் வழிகளில் இறங்கியுள்ளார்கள். அதுபோன்ற ஒரு நிலைமை தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் வீல்சேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஜேந்திர சிங்கின் வாழ்க்கை தற்போது அடியோடு மாறியுள்ளது. சொந்த ஊர்களுக்குத் திரும்பி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், உள்ளூரில் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படுகிறது. தற்போது வாழ்வாதாரத்தை இழந்துள்ள ராஜேந்திர சிங்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வேலை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளியான அவர் இதுபற்றி கூறுகையில், ‘வீல்சேர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனக்கும் பசிக்கும், வயிறு என்று ஒன்று உள்ளது.
எனது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு எனக்கு வேலை வழங்க வேண்டும், அப்போது தான் எனது பொருளாதார நிலையைச் சரி செய்ய முடியும் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே பத்திரிகைகளில் ராஜேந்திர சிங்கின்நிலை குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் விஜய் குமார், அவரது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு அரசுத் திட்டங்களின் கீழ் உடனடியாக நிதி உதவி வழங்கும்படி மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.