என்ன ‘கொடுமை’ சார்..! இந்த மோசமான சாதனையிலயா சிஎஸ்கே ‘முதலிடம்’ பிடிக்கணும்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2020 தொடரில் மோசமான சாதனை ஒன்றில் சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் 2020 தொடரில் முதல் பாதி ஆட்டங்கள் கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே நடைபெற்று வருவதால் ஒவ்வொரு போட்டியும் சற்று வித்தியாசமான முடிவையே கொடுத்து வருகிறது.
தொடரின் ஆரம்பத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த மைதானங்கள் தற்போது பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது. பவர் பிளே ஓவர்களில் தற்போது அதிக ரன்கள் அடிக்க வீரர்கள திணறி வருகின்றனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது.
பவர் பிளேவில் 6 ஓவர்கள் வீசப்படும். இதில் 52.1 சதவீத பந்துகளில் சென்னை அணி ரன் எடுக்காமல் இருந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 36 பந்துகளில் 20 பந்துகள் ரன் ஏதும் எடுக்காமல் வீணடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து கொல்கத்தா அணி 49.9 சதவீதம் டாட் பால் விளையாடி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனை அடுத்து ராஜஸ்தான் 48.8 சதவீதமும், மும்பை இந்தியன்ஸ் 48.2 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 41.4 சதவீதம் மட்டுமே பவர் பிளேவில் பந்தை வீணடித்து உள்ளது.
சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இன்னும் 4 போட்டிகளே மீதம் உள்ளதால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பும் சென்னை அணிக்கு கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
