இத விட்டா வேற ‘சான்ஸே’ இல்ல.. கடைசியா ‘ஒரு’ வாய்ப்பு.. சிஎஸ்கேவின் ‘ப்ளே ஆஃப்’ கனவு நிறைவேறுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டி இன்று (23.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணி 9 போட்டிகளில் விளையாடிய 6 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது. ஏற்கனவே சென்னை அணியுடன் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும் என தெரிகிறது.
A win for #CSK in today's #CSKvsMI game will make
- #CSK 's hope for a Play-offs birth alive..
- Will bring confidence back to Team #CSK
- Will rejuvenate the #CSK Fans..
- Will reduce the negativity around the franchise..
Can #Dhoni and #CSK do it? #CSKvsMI #IPL2020
— Ramesh Bala (@rameshlaus) October 23, 2020
ஆனால் சிஎஸ்கே அணிக்கோ இது வாழ்வா, சாவா போட்டி. ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமானால் சென்னை அணி இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதனால் இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.