"இன்னைக்கி தார தப்பட்ட கிழிய போகுது,.." 'உச்சக்கட்ட' எதிர்பார்ப்பில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்... என்ன நடக்கப் போகுதோ??...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உருவாகும் என்ற நிலையில் சென்னை அணி இன்று களமிறங்குகிறது. சென்னை அணியின் கேதார் ஜாதவ் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்ட நிலையில், இன்று அவர் அணியில் இடம்பெறவில்லை.
அது மட்டுமில்லாமல், சென்ற வருட ஐபிஎல் சீசனில் சிறந்த பவுலரான இம்ரான் தாஹிர் இதுவரை களமிறங்கவில்லை. இன்றைய போட்டியில் அவர் வாட்சனுக்கு பதிலாக களமிறங்குகிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அது மட்டுமில்லாமல், கடந்த போட்டி முடிவுக்கு பின்னர் இளம் வீரர்களிடம் பெரிதாக உத்வேகத்தை காணவில்லை என தோனி தெரிவித்திருந்தது கடும் விமர்சனத்துக்குள் ஆனது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் இளம் வீரர்களான ஜெகதீசன் மற்றும் கெயிக்வாட் ஆகியோர் களமிறங்கும் நிலையில், தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பாக அமையும். இந்த முறை சிறந்த அணியுடன் சென்னை அணி களமிறங்குவதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சிஎஸ்கே மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சவுரப் திவாரி களமிறங்குகிறார். அணியின் கேப்டனாக பொல்லார்ட் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.