"என்னது ஐபிஎல் கடைசி போட்டி இங்க நடக்கபோகுதா”.. வெளியான தகவல்.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 19, 2019 09:45 PM

ஐபிஎல் 2019 லீக் போட்டிகள் நடைபெறும் மொத்த அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.  

IPL 2019 Schedule Released, Final Dates and place Yet To Be Revealed

12 -வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 -ம் தேதி முதல் நடைபெற உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பயிற்சியை ஆட்டத்தைக் காண சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதனத்தில் கூடினர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஐ.பி.எல் தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 23 முதல் மே 5-ம் தேதி வரை நடைபெறும் ஒட்டுமொத்த லீக் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #IPLSCHEDULE