"இது ஆரம்பம் தான்",,... "'இனிமே' தான் எல்லாம் இருக்கு"... "உச்ச நீதிமன்ற" தீர்ப்புக்கு பின்... 'சுஷாந்த்' சகோதரி செய்த 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதியன்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணம் குறித்து மும்பை போலீசார் மற்றும் பீகார் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரின் தற்கொலைக்கு பின் அவரது முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உட்பட சிலர் இருப்பதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகாரளித்திருந்தார்.
அதே போல, அவரது மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் உட்பட பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக, சிபிஐ விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவால் பலர் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர். சுஷாந்த் சிங் மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
There we go!! Finally!! CBI for SSR!! #CBITakesOver
— shweta singh kirti (@shwetasinghkirt) August 19, 2020
Congratulations to my extended Family!! So happy... first step towards victory and unbiased investigation. #JusticeforSushantSingRajput #OurfullfaithonCBI
— shweta singh kirti (@shwetasinghkirt) August 19, 2020
சுஷாந்த் சிங் சகோதரியான ஸ்வேதா சிங் கீர்த்தியும் சிபிஐ விசாரணை உத்தரவுக்கு வரவேற்பளித்துள்ளார். 'நன்றி ஆண்டவா, எங்களது பிரார்த்தனைகளுக்கு பதிலளித்து விட்டீர்கள். ஆனால் இது ஆரம்பம் மட்டுமே. சிபிஐ மீது நம்பிக்கையுள்ளது' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Thank you God! You have answered our prayers!! But it is just the beginning... the first step towards the truth! Full faith on CBI!! #Victoryoffaith #GlobalPrayersForSSR #Wearefamily #CBITakesOver
— shweta singh kirti (@shwetasinghkirt) August 19, 2020