'சுஷாந்த் சிங்' இறந்த அன்னைக்கு... அவரோட "அப்பார்ட்மெண்ட்" பக்கம் சுத்தி திரிஞ்ச... 'பொண்ணு' யாருன்னு 'தெரிஞ்சுடுச்சு'!!,,.. வெளியான பரபரப்பு 'தகவல்'!!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட தினத்தன்று அவரது வீட்டில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நுழையும் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதியன்று, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நாள்தோறும் பல பரபரப்பான கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் மரணமடைந்த நாளன்று அவரது குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கேள்விகளை எழுப்பியுள்ளது.
அந்த பெண் யார் என்பது குறித்து சுஷாந்த் சிங் குடும்பத்தினருக்கும், அந்த குடியிருப்பில் இருந்த செக்யூரிட்டிகளுக்கும் அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. மேலும், அங்கு சென்ற அந்த பெண், அங்கிருந்த வேறொரு நபரிடம் ஒரு பொருளை கொடுப்பதும் அதனை அந்த நபர் கருப்பு பை ஒன்றில் போடும் காட்சிகளும் இடப்பெற்றுள்ளன.
இந்நிலையில், அந்த பெண் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷோவிக் சக்ரபோர்த்தியின் காதலி ஜமீலா களுட்வாலா தான் அந்த பெண் என தகவல்கள் தெரிவிக்கின்றது. சுஷாந்த் சிங் முன்னாள் காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் தான் ஷோவிக். இவரது காதலி தான் அந்த பெண் என கருதப்படும் நிலையில், அவருடன் மேலும் இரண்டு பெண்களும் சுஷாந்த் மரணம் நிகழ்ந்த அன்று அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.
முன்னதாக, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது தந்தை கே.கே. சிங், ரியா உட்பட ஆறு பேர் மீது புகாரளித்த நாள் முதல் சுஷாந்த் சிங் மரணம் குறித்து நாள்தோறும் பல மர்மமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மற்ற செய்திகள்
