சூட்கேஸில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் உடல்கள்.. இப்படியும் ஒரு ஆராய்ச்சியா?.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவின் ஓரிடத்தில் இறந்துபோன விலங்குகளின் உடல்கள் சூட்கேசில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிக்காக நடத்தப்படும் இந்த சோதனைகள் ஆறு மாதம் நீடிக்க இருக்கின்றன.

ஆய்வு
மேற்கு ஆஸ்திரேலியாவின் புதர் நிலங்களில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 70 பெட்டிகளில் இறந்துபோன பன்றிகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. காலநிலை, வெப்பநிலை ஆகியவை உயிரிழந்த விலங்குகளின் உடல்களில் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும், உடல் சிதைவடையும் போது நடைபெறும் படிநிலைகள் குறித்து தடயவியல் நிபுணர்கள் அறிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்கிறார்கள் நிபுணர்கள். இது குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உதவி செய்யும் என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.
இறந்த விலங்குகளின் உள்ளேயும் வெளியேயும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் ஈரப்பதம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அளவிடுகின்றனர். உடல்கள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் நுண்ணுயிரியல் மற்றும் வேதியியல் மாற்றங்களும் கவனிக்கப்படும்.
மனித உடல்கள்
இதுகுறித்து பேசிய முர்டோக் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் மூத்த விரிவுரையாளர் பாவ்லா மாக்னி,"ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான மனித உடல்கள் மறைவான இடங்களில் பதுக்கப்படுகின்றன. குற்றத்திலிருந்து தப்பிக்கவும், உடலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் சூட்கேஸ்கள்,பைகள், வீல் பின்ஸ், கார் டிரங்குகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்கள் ஆகியவற்றை குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளால் எளிதில் பிடிக்கப்படாமல் இருக்கவும் தற்காலிகமாக உடலை பாதுகாக்கவும் இதுபோன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, இதனுள் உடல்கள் எவ்வாறு சிதைவுறுகின்றன? என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.
2022 ஆம் ஆண்டு குளிர்கால துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வு கோடைகாலம் வரையில் நடைபெற்றது. இதில் திரட்டப்பட்ட தரவுகள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட தடயவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் எனத தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
