வீட்டின் மேல்கூரையை பிச்சுக்கிட்டு உள்ள விழுந்த மர்ம உலோகம்.. ஒருவேளை அதுவா இருக்குமோ? ஆய்வாளர்கள் சொல்லிய ஆரூடம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வானத்தில் இருந்து மர்ம பொருள் வந்து விழுந்திருக்கிறது.
மர்ம உலோகம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் டெமிகா லாதர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது கணவர் மேட் மற்றும் குழந்தை ஓசேனியாவுடன் வீட்டில் இருந்த கிச்சனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பலத்த சத்த்ம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து, என்ன நடந்தது என்பதை அறிய முயன்ற இத தம்பதி, வீட்டின் மேற்கூரையில் மிகப்பெரிய துளை விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் குழந்தையின் தொட்டில் இருந்த இடத்தில் ஏதோ உலோக பொருள் கிடப்பதை இருவரும் பார்த்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய டெமிகா," 5 மாதமே ஆன என்னுடைய குழந்தைக்கு முதன்முறையாக ஐஸ்க்ரீம் கொடுப்பதற்காக சமையல் அறையில் நானும் எனது கணவரும் நின்றுகொண்டிருந்தோம். அப்போது வெடி வெடித்ததைப்போல சத்தம் கேட்டது. அந்த உலோகம் குழந்தையின் தொட்டிலில் விழுந்திருக்கிறது. நல்லவேளையாக அப்போது தொட்டிலில் குழந்தை இருக்கவில்லை" என்றார்.
விண்வெளி குப்பை?
டெமிகாவின் வீட்டில் மர்ம உலோகம் விழுந்த விஷயம் உள்ளூர் முழுமையும் தீயாக பரவியிருக்கிறது. இந்த உலோகம் பூமியின் வெளிவட்டப்பாதையில் சுற்றிவரும் செயற்கைக்கோள்கள் அல்லது ராக்கெட்டுகளின் பாகமாக இருக்கலாம் என மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இன்னும் சிலர், இது ஏலியனின் செய்கையாக இருக்கலாம் என ஆரூடம் சொல்லிவருகிறார்கள்.
இந்நிலையில், சதர்ன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் விஞ்ஞானி டாக்டர் ஜோன்டி ஹார்னர் இதுபற்றி பேசுகையில்,"முதலாவதாக, அது விண்வெளிக் குப்பையாக இருந்தால், அது உலோகமாக இருந்தாலும், அதைவிட மிகவும் எரிந்ததாகவும் பயங்கரமாகவும் இருந்திருக்கும். ஆனால் விண்வெளி குப்பை அல்லது விண்கல் இந்த வகையான விளைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை" என்றார்.
டெமிகாவின் வீட்டில் விழுந்த மர்ம உலோகம், எங்கிருந்து வந்தது? என்பது இன்னும் விளக்கப்படாத மர்மமாகவே இருந்துவருகிறது. உடைந்த மேற்கூரையை சரிசெய்ய காப்பீடு நிறுவனத்தை அணுக இருப்பதாக டெமிகா தெரிவித்திருக்கிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8