'ஆஸ்திரேலியா அவரை உடனே விடுவிக்கணும்'- விசா விவகாரத்தில் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக தீர்ப்பு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு விசா வழங்கவும் விளையாடவும் அந்த அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் வருகிற ஜனவரி 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆன நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்து இறங்கினார். செர்பியாவைச் சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் இதுவரையில் 9 முறைகள் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரைக் கைப்பற்றி உள்ளார்.
இவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என ஆஸ்திரேலியா நாட்டுக்குள் இவரை அனுமதிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியா டென்னிஸ் சம்மேளனம் விலக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், முறையான சான்றிதழ்கள் இல்லை என ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய ஜோகோவிச்சுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. இதனால் நீண்ட நேரமாக அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உடன் விமான நிலையத்திலேயே காத்திருந்த ஜோகோவிச், குடியேற்றத் துறையின் தடுப்புக் காவல் மையமாக செயல்படும் ஹோட்டல் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து செர்பியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது ஜோகோவிச்சுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா அரசு, ஜோகோவிச்சின் பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கி அவரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அவருக்கு விசா மறுக்கப்படவே வாய்ப்புள்ளது.

மற்ற செய்திகள்
