‘ரோடு வழியா போனா லேட் ஆகிடும்’.. 21 கிலோமீட்டர் நிற்காமல் சென்ற மெட்ரோ ரயில்.. உயிரை காக்க நடந்த உருக்கமான சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை மற்றொரு நபருக்கு பொருத்த மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி நகர் காமிநேனி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் ஒருவரது இதயம் ஜூப்ளிஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்.பி நகரில் இருந்து ஜூப்ளிஹில்ஸ் பகுதிக்கு சாலை வழியாக சென்றால் வாகன நெரிசல் காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் ஆகும்.
அதனால் மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி பயணிகள் இல்லாமல் சிறப்பு மெட்ரோ ரயிலில் இதயம் கொண்டு செல்லப்பட்டது. 21 கிலோ மீட்டர் தொலைவை 30 நிமிடங்களில் கடந்து, மருத்தவமனையில் இதயம் சேர்க்கப்பட்டது. உடனே அந்த நபருக்கு இதயத்தை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.