மகளை பார்க்க வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் தலைமறைவான அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.
புகார்
தமிழக கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ். இவருடைய வயது 32. விவசாயம் செய்து வரும் பிஜேஸ், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனுமோல் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அனுமோல் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய அனுமோல் காணாமல் போனதாக கணவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
துர்நாற்றம்
இந்த சூழ்நிலையில் பாம்பனார் பகுதியில் வசித்து வந்த அனுமோலின் தந்தை ஜான் தனது மகளுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது போன் ரிங் ஆகி பின்னர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஜான் மற்றும் அவரது மனைவி பிலோமினா அனுமோலின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அப்போது படுக்கை அறையில் துர்நாற்றம் பேசியதால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது அழுகிய நிலையில் கட்டிலுக்கு கீழே அனுமோலின் உடல் கிடந்து இருக்கிறது. இதனால் கதறி அழுத ஜான் மற்றும் அவரது மனைவி உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உடல் அழுகி இருப்பதால் அனுமோல் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
விசாரணை
இந்த சூழ்நிலையில் குழந்தையுடன் பிஜேஸ் அங்கிருந்து தலைமுறைவாகியுள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே தகராறு காரணமாக அனுமோல் மரணமடைந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
