விமான எஞ்சினில் பற்றிய தீ.. சாமர்த்தியமாக செயல்பட்டு 185 பயணிகளையும் காப்பாற்றிய பெண் விமானி.. யாருப்பா இவங்க?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 21, 2022 01:37 PM

விமான எஞ்சினில் தீ பிடித்ததை அடுத்து, துரிதமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கி பயணிகளை காப்பாற்றிய பெண் விமானிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

Captain Monicaa Khanna Lands Damaged SpiceJet Flight Safely

Also Read | விபத்தில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சூப்பர் கார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அதிர்ச்சி

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 விமானம். டேக் ஆஃப் செய்யப்பட்ட கொஞ்ச நேரத்தில் விமான பணியாளர்கள் விமானத்தின் முதலாவது எஞ்சினில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனையடுத்து விமானிக்கு தகவல் கொடுத்துள்ளனர் பணியாளர்கள். விமானிகளான மோனிகா கண்ணா மற்றும் பல்பிரீத் சிங் பாட்டியா ஆகியோர் விமானத்தை அவரசமாக தரையிக்க முடிவெடுத்துள்ளனர்.

185 பயணிகளுடன் பயணத்தை துவங்கிய விமானத்தை மீண்டும் பாட்னா விமான நிலையத்திலேயே தரையிறக்கியுள்ளார் மோனிகா. இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

பறவை

இந்த சம்பவம் குறித்து பேசிய இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர்,"விமானத்தின் ஒரு எஞ்சினில் பறவை மோதியிருக்கலாம் என விமானிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து விமானத்தினை டேக் ஆஃப்  செய்திருக்கிறார்கள் விமானிகள். ஆனால் எஞ்சின் பழுதடைந்து புகையை வெளிவிட துவங்கியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் விமானிகளுக்கு தகவல் அளித்திருக்கின்றனர். ஆகவே, விமானம் மீண்டும் பாட்னாவிலேயே தரையிறக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

Captain Monicaa Khanna Lands Damaged SpiceJet Flight Safely

பாராட்டு

இந்நிலையில், பதற்றமான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கிய இரு விமானிகளையும் அந்த விமான நிறுவனம் பாராட்டியிருக்கிறது. இதுகுறித்து  பேசிய ஸ்பைஸ்ஜெட் விமான நடவடிக்கைகளின் தலைவர் குர்சரண் அரோரா," விமானம் தரையிறங்கும் போது ஒரு இன்ஜின் மட்டுமே இயங்கியது. பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்து, பறவை மோதியதில் மின்விசிறி மற்றும் இயந்திரம் சேதமடைந்ததை உறுதி செய்தனர். இந்த சம்பவத்தின் போது கேப்டன் மோனிகா கண்ணா மற்றும் முதல் அதிகாரி பல்பிரீத் சிங் பாட்டியா ஆகியோர் சிறப்பாக நடந்து கொண்டனர். அவர்கள் முழுவதும் அமைதியாக இருந்தனர். மேலும் விமானத்தை நன்றாக கையாண்டனர். அவர்கள் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள். நாங்கள் அவர்களை நினைத்து பெருமை கொள்கிறோம்" என்றார்.

விமானி மோனிகா கண்ணா, 2018 இல் ஸ்பைஸ் ஜெட்டில் சேர்ந்தார். எமிரேட்ஸ் ஏவியேஷன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பாட்டியா, ஜெட் ஏர்வேஸில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 2019 இல் நிறுவனத்தில் சேர்ந்தார். ஒரு எஞ்சினை மட்டுமே வைத்துக்கொண்டு விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய இரு விமானிகளுக்கும் சமூக வள தளங்களில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

Also Read | "இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது".. பெண்ணாக மாறிய எலான் மஸ்கின் மகன் கொடுத்த மனு..!

Tags : #SPICEJET #FLIGHT #SPICEJET FLIGHT #பெண் விமானி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Captain Monicaa Khanna Lands Damaged SpiceJet Flight Safely | India News.