இறந்த தந்தை எழுதி வைத்த கடிதத்தை.. 9 வருஷம் கழிச்சு படிச்ச பெண்.. தூக்கி வாரி போட்ட அந்த ஒரு லைன்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் தனது தந்தை எழுதி வைத்த கடிதம் ஒன்றை அவர் இறந்து சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ள சூழலில் அதிலிருந்த விஷயம், அவரை வேதனை அடைய வைத்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners
இது தொடர்பாக தற்போது Reddit தளத்தில், வைரலாகி வரும் பதிவின் படி, பெண் ஒருவரின் தந்தை கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக சில உடல்நல பிரச்சனைகளால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தந்தையின் மறைவுக்கு பிறகு அவரது பொருட்களை அதிகமாக அந்த அப்பார்ட்மெண்டில் அந்த பெண் வைத்திருக்கவில்லை என்றும் தெரிகிறது.
தந்தை எழுதி வைத்த கடிதம்
ஆனால் அவரது தந்தை பயன்படுத்திய ஒரு ஃபயர்சேஃப் லாக்பாக்ஸ் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த பெட்டியை இத்தனை நாட்கள் திறக்காமல் இருந்து வந்த பெண் சமீபத்தில் அதை திறந்து பார்க்க வேண்டும் என விரும்பியதாகவும் கூறப்படுகிறது. அதனை திறந்த போது அந்த பெட்டிக்குள் சில கிரெடிட் கார்டுகள் மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட் இருந்துள்ளது.
மேலும் ஒரு குழந்தையின் புகைப்படமும் அது தவிர ஒரு இரண்டு பக்கத்திற்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. தொடர்ந்து அந்த கடிதத்தின் இரண்டாவது பக்கத்தில் இருந்த விஷயம் தான் அந்த பெண்ணை ஒரு நிமிடம் தூக்கிவாரி போட வைத்துள்ளது. அதில் இருந்த குழந்தையின் புகைப்படம் அவரது அண்ணன் என்ற தகவலும் அவரை அந்த பெண் பார்த்ததில்லை என்ற தகவலையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தான் காணாத சகோதரன்
மேலும் தனது தாயை திருமணம் செய்வதற்கு முன்பாக வேறொரு பெண்ணை அவரது தந்தை திருமணம் செய்துள்ளதாகவும் அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்ததாகவும், அந்த ஆண் குழந்தையும், அவரது தாயும் ஒரு விபத்தில் இறந்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் தந்தை, முதல் மனைவி மற்றும் ஆண் குழந்தையின் இழப்பில் இருந்து மீள முடியாமல் இருந்த சூழலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது தாயையும் பார்த்து அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கண்ணீர் விட்டு அழுத பெண்
தான் இதுவரை பார்த்திடாத, கேட்டிராத தன்னுடைய சகோதரன் குறித்த தகவல் அந்த கடிதத்தில் இருந்ததால் அந்த பெண் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போயுள்ளார். அது மட்டுமில்லாமல், தனது தந்தை தன்னிடம் அதிகமாக பாசம் காட்ட தயங்கியதற்கான காரணமும் தந்தை மறைந்து சுமார் 9 ஆண்டுகள் கழித்து அந்த பெண்ணுக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது. அதிகமாக தனது தந்தை தனிமையில் வேதனையுடன் இருந்த காரணமே இந்த கடிதத்தை படித்த பிறகு தான் தெரிய வந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners
மேலும் கடந்த பல ஆண்டுகளில் கடிதத்தில் படித்த சமயத்தில் அழுத அளவிற்கு அழுததே இல்லை என குறிப்பிட்டுள்ள சூழலில், தந்தை உயிருடன் இருக்கும் போதே இதை என்னிடம் தெரிவித்திருக்கலாம் என்றும் தந்தை அப்படி இருந்ததற்கான காரணம் தற்போது தெரிய வந்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
