"சிறையில் வைத்து இளம்பெண் கொடுத்த முத்தம்".. பறிபோன கைதியின் உயிர்.! போலீஸாரை உறைய வைத்த சம்பவம்.! கைதான பெண்.!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 18, 2022 12:24 AM

சிறையில் இருந்த கைதி ஒருவரை பார்க்க சென்ற பெண் ஒருவர் செய்த காரியமும், அதன் பின்னர் நடந்த சம்பவமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tennessee woman meets inmate in prison police enquiry

Tennessee பகுதியில் அமைந்துள்ள சிறைச் சாலை ஒன்றில், ஜோஷ்வா ப்ரவுன் என்பவர், போதைப் பொருள் தொடர்பான வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

இதற்காக, ஜோஷ்வாவுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சிறைத் தண்டனை காலம், 2029 ஆம் ஆண்டு முடிய இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், திடீரென சிறை வளாகத்திலேயே ஜோஷ்வா உயிரிழந்த சம்பவம், போலீசாரை கடும் அதிர்ச்சிக்குள் ஆக்கி இருந்தது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

கடந்த பிப்ரவரி மாதம், ஜோஷ்வாவை சிறையில் பார்க்க, ரேச்சல் டொலார்ட் என்ற பெண் ஒருவர் வந்துள்ளார். சிறைக் கைதிகளை சந்திக்கும் டர்னி சென்டர் தொழிற்சாலை வளாகத்தில் ஜோஷ்வாவை ரேச்சல் சந்தித்துள்ளார். அந்த சமயத்தில், ஜோஷ்வாவுக்கு ரேச்சல் முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அப்போது, தன்னுடைய வாயில் போதை பொருள் ஒன்றை மறைத்து வைத்து எடுத்து வந்த ரேச்சல், அதனை முத்தம் கொடுத்து, ஜோஷ்வா வாயில் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், ஜோஷ்வா எடுத்த போதை பொருளின் டோஸ் அதிகமாக இருக்கவே, சுயநினைவை இழந்த ஜோஷ்வா சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிகிச்சை பலனளிக்காமல், ஜோஷ்வாவும் உயிரிழந்து விட்டார். கடந்த பல மாதமாக, ஜோஷ்வா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தற்போது போதை பொருளை கடத்தியதற்கும் அதனை சிறைக் கைதி கொடுத்ததற்கும் ரேச்சல் என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.

Tennessee woman meets inmate in prison police enquiry

இது போன்ற சம்பவம், சிறைச் சாலையில் போதைப் பொருளை கடத்துவதன் மூலம் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பின் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது என TDOC இன் விசாரணைகள் மற்றும் நடத்தை அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கைதிக்கு போதை பொருள் கொடுக்க வந்த இடத்தில், பெண் ஒருவர் முத்தத்தை பரிமாறிக் கொண்டதன் பெயரில், அதில் எதிர்பாராமல் கைதி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #INMATE #WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tennessee woman meets inmate in prison police enquiry | World News.