'கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காம கூட போகலாம்...' - ஷாக் கொடுத்த உலக சுகாதார நிறுவனத் தலைவர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற உலக சுகாதார இயக்குனர், கொரோனா வைரஸிற்கு உடனடி தீர்வு என்ற ஒன்று இல்லை, ஒரு சில சமயங்களில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாமலும் போகலாம் என தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது தீவிரம் அடைந்து உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க ரஷ்யா இந்தியா பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா தாக்கத்தால் நிலைகுலைந்து போகியுள்ளனர் எனக் கூறலாம்.
மேலும் உலக சுகாதார அமைப்பு கூறும் ஒவ்வொரு அறிவிப்புகளையும், புள்ளி விவரங்களையும், தகவல்களையும் உலக மக்கள் அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர். இந்நிலையில் ஜெனீவாவில் நடந்த ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா தொற்றுநோயைத் தடுக்க்கும் வகையில் பல பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம். பலகட்ட பரிசோதனைகளை கடந்து நல்ல வகையில் தடுப்பூசிகள் மக்களுக்கு உதவ வேண்டும் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இருப்பினும், இந்த மருந்துகளும் தடுப்பூசிகளை மட்டும் தீர்வாகாது. ஒரு சில நேரங்களில் இந்த தடுப்பூசிகள் செயல்படாமலும் போகலாம்.' எனக் கூறியுள்ளார்.
மேலும், 'நாம் சோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், நோயாளியுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல், சமூக இடைவேளை மற்றும் முககவசம் அணிவது போன்ற அறியப்பட்ட அடிப்படைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வுஹானில் கொரோனா வைரஸ் பரவும் என சந்தேகப்படும் பகுதிகளுக்கு ஐ.நா. சுகாதார நிறுவனம் ஒரு பெரிய குழு நிபுணர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸை பற்றி நாங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். மேலும், கோவிட் 19 வைரஸின் தீவிர தாக்குதலிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சிகிச்சைகளில் உலகம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
