கொரோனாவின் நடுங்கவைக்கும் ஸ்கெட்ச்!.. வரவு செலவு கணக்குகளை வெளியிட்ட மத்திய அரசு!.. இந்தியாவின் நிலை இது தான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடப்பு நிதியாண்டில் 2020 ஜூன் மாதம் வரையிலான மத்திய அரசின் கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு 2020 ஜூன் மாதம் வரையில், ரூ.1,53,581 கோடி வருவாய் பெற்றுள்ளது (2020-21 மொத்த வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 6.84%). இதில், ரூ.1,34,822 கோடி வரி வருவாய் (நிகரம்) , ரூ.15,186 கோடி வரி அல்லாத வருவாய், ரூ.3,573 கோடி கடன் அல்லாத முதலீட்டு வருவாய் ஆகியவை அடங்கும்.
கடன் அல்லாத முதலீட்டு வருவாயில், கடன்கள் மீட்பு அடங்கும் (ரூ.3,573 கோடி). இந்தக் காலகட்டத்தில், ரூ.1,34,043 கோடியை, மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வுத் தொகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.14,588 கோடி குறைவாகும்.
மத்திய அரசின் மொத்த செலவு ரூ.8,15,944 கோடி (2020-21 பட்ஜெட் மதிப்பீட்டில் 26.82%). இதில், ரூ.7,27,671 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.88,273 கோடி முதலீட்டு கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய்ச் செலவில், 1,60,493 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. ரூ.78,964 கோடி, பெரிய மானியங்கள் கணக்கில் சேர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
