RCB VS CSK: இன்னைக்கு நடக்கப்போற மேட்ச் தோனிக்கு ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பல சாதனைகளை படைக்க உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 49-வது லீக் போட்டியில் இன்று (04.05.2022) புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அதனால் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி முனைப்பு காட்டும் என தெரிகிறது.
அதேபோல் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்றைய போட்டியில் தோனி பல சாதனைகளை படைக்க உள்ளார். அதில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி தனது 200-வது போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டும் 2-வது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக பெங்களூரு அணி வீரர் விராட் கோலி கடந்த ஆண்டு இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது வரை பெங்களூரு அணிக்காக 217 போட்டிகளில் விராட் கோலி விளையாடியுள்ளார். அதேபோல், தோனி இதுவரை டி20 கிரிக்கெட்டில் 5994 ரன்கள் குவித்துள்ளார். அதனால் இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 6 ரன்கள் அடித்தால் ஒரு கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார்.
இந்த சாதனையை படைத்த முதல் நபராக விராட் கோலி உள்ளார். அவர் 190 போட்டிகளில் விளையாடி 6451 ரன்கள் குவித்துள்ளார். மேலும் பெங்களூரு அணிக்கு எதிராக இதுவரை 836 ரன்கள் தோனி அடித்துள்ளார். இதில் 46 சிக்சர்களும் அடங்கும். அதனால் இன்றைய போட்டியில் 4 சிக்சர்கள் அடித்தால், ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக 50 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8