கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய உலகின் காஸ்ட்லி தண்ணீர் பாட்டில்.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்கோடை காலம் துவங்கி விட்டது. அதிக அளவு தண்ணீர் குடிக்கும்படி மருத்துவர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனால் வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்படும் இந்த தண்ணீர் பாட்டிலை பற்றி கேட்டால் மருத்துவரிடமே செல்லும் நிலை ஏற்படும் போலிருக்கிறது.
Also Read | நெற்றியில் விபூதி..மார்பில் 'அம்மா' டாட்டூ..WWE -ஐ மிரட்டும் இந்திய வீரர்... யார் இந்த பாகுபலி?
உலகின் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில்
வழக்கமாக நாம் 10 ரூபாய்க்கோ அல்லது அதிகபட்சமாக 50 ரூபாய்க்கோ தண்ணீர் பாட்டிலை வாங்கி இருப்போம். ஆனால் 44 லட்ச ரூபாய்க்கு ஒரு தண்ணீர் பாட்டில் உலகில் விற்பனையாகி வருகிறது. உண்மைதான். அக்வா டி கிறிஸ்டால்லோ ஏ மோடிக்லியாணி தண்ணீர் பாட்டில் தான் உலகின் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் ஆகும். கடந்த 2010 ஆம் ஆண்டில் ரூ.44 லட்சத்துக்கு விற்பனையாகி, உலகின் மிகவும் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்த அக்வா டி கிறிஸ்டால்லோ ஏ மோடிக்லியாணி தண்ணீர் பாட்டில்.
என்ன ஸ்பெஷல்
வெறும் தண்ணீரை இந்த விலை விற்பவர்கள் இதன் பாட்டிலை சாதாரணமாகவா வடிவமைத்திருப்பார்கள்? இந்த பிரத்யேக பாட்டில் முழுவதும் தங்கத்தால் செய்யப்படுகிறதாம். மேலும் இந்த பாட்டிலில் அடைக்கப்படும் தண்ணீரை உலகின் மூன்று இடங்களில் இருந்து மட்டுமே சேகரிக்கிறார்களாம். அதாவது பிரான்ஸ் நாட்டில் உள்ள நீரூற்றுகளிலிருந்தும், தெற்கு பசிபிக்கில் உள்ள தீவான பிஜியில் உள்ள நீரூற்றுகளிலிருந்தும், ஐஸ்லாந்தில் உள்ள பனிப் பாறைகளிலிருந்தும் இந்த நீரானது எடுக்கப்படுகிறதாம்.
உலக புகழ்பெற்ற டிசைனரான ஃபெர்னாண்டோ அல்டமிரானோ (Fernando Altamirano) என்பவர் தான் இந்த அக்வா டி கிறிஸ்டால்லோ ஏ மோடிக்லியாணி தண்ணீர் பாட்டிலையும் வடிவமைத்துள்ளார். இத்தனைக்கும் இந்த தண்ணீர் பாட்டில் 750 மிலி அளவு தண்ணீரை மட்டுமே கொண்டிருக்கும். அதாவது ஒருலிட்டர் கூட கிடையாது. முக்கால் லிட்டர் மட்டுமே.
கோனா நிகரி
இந்த பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பருகினால் புத்துணர்ச்சியாக இருக்கலாம் எனவும் ஆரோக்கியமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதேபோல, ஜப்பான் நாட்டில் விற்கப்படும் ‘கோனா நிகரி’ என்ற தண்ணீர் பட்டில் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தண்ணீரை பருகினால் எடை குறையும், புத்துணர்வு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8