"ஆஹா,, நீங்க இங்கயும் வந்துட்டீங்களா??... சும்மா இல்ல மும்பை 'ஈஸி'யா ஜெயிச்சது..." வைரலாகும் பெண்மணி 'போட்டோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தற்போது மோதி வருகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் நிலையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி ஒரு ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பிறகு டெல்லி அணியால் மீள முடியாத நிலையில், டெல்லி அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் போது மைதானத்தில் இருந்த வயதான பெண்மணி ஒருவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான நீட்டா அம்பானியின் தாயான பூர்ணிமா தலால் என்பவர் தான் அந்த பெண்மணி. இவர் மும்பை அணியின் அதிர்ஷ்ட பெண்மணியாக அறியப்படுகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் புனே அணிகள் மோதின. அப்போது த்ரில்லிங்கான இறுதி ஓவரின் போது, நீட்டா அம்பானியின் தாயார் அணிக்காக பிரார்த்தனை செய்தது அதிகம் கேமராவில் காட்டப்பட்டது. அவரது வேண்டுதலின் படியே, அந்த போட்டியில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தது.
Omg prayer aunty is in the stadium...MI is definitely winning this one 🤣🤪 #MIvsDC
— Rahul Gunjalkar (@rahul_gunjalkar) November 5, 2020
MI MANAGEMENT braught that prayer wali aunty. Wow!!
— shubham Choudhary (@batmanalive) November 5, 2020
Beware @DelhiCapitals prayer aunty is back in today’s #Qualifier1 #MIvDC pic.twitter.com/855k7GWjOU
— ZayN AFwaN (@afwanlefthander) November 5, 2020
Prayer Aunty is in the stadium. Let's see who is gonna stop us from winning the title this time 😎😎
— rocKSTar🏏 (@kst7781) November 5, 2020
அதன் பிறகு, இன்றைய போட்டியிலும் அவர் மைதானத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றன.
Prayer aunty seen in the stands....mumbai is winning for sure🔥#MIvsDC
— Aman Raj Raghuwanshi💙 (@amanraj208) November 5, 2020
Omg prayer aunty is in the stands today! 😲 #MIvDC pic.twitter.com/aLKYvZbNdJ
— Tina Tengra 🙅🏻♀️ (@tinatengra07) November 5, 2020