தம்பி நீ ‘முன்னாடி’ போ.. ‘சோகமாக’ நடந்து வந்த ராகுல்.. ரோஹித் செஞ்ச ‘தரமான’ செயல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹரை, கேப்டன் ரோஹித் ஷர்மா முன்னே நடக்குமாறு கை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 55 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள், டி காக் 40 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்ட்யா 37 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியை பொருத்தவரை அஸ்வின் 3 விக்கெட்டுகள், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆன்ரிச் நார்ட்ஜி தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனை அடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ரித்வி ஷா, ஷிகார் தவான் மற்றும் ரஹானே ஆகிய மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அந்த அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் (65 ரன்கள்) மற்றும் அக்சர் பட்டேல் (42) தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களின் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் 20 ஓவர்களில் டெல்லி அணியால் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹரை முன்னே நடந்து அணியை வழி நடத்த ரோஹித் அனுப்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் பும்ரா 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல் டிரெண்ட் போல்ட் 2 ஓவர்களை வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Rohit Sharma, the captain - Class act. Allowing Rahul Chahar who had a disappointing day with ball allowing to lead the team into dressing room😍
That's Our Captain Rohit💙#MIvDC #MIvsDC #MumbaiIndians #OneFamily #MITheEmperorOfIPL #MI @ImRo45 @mipaltan pic.twitter.com/dz1oZPVCpW
— Ukkasha😈 (@smart_ukkasha) November 5, 2020
ஆனால் மும்பை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹர் வீசிய 2 ஓவர்களில் டெல்லி அணியினர் 35 ரன்களை விளாசினர். இதன்காரணமாக ராகுல் சஹர் சோகமாக காணப்பட்டார். அதனால் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக டிரெஸ்ஸிங் சொல்லும்போது, முன்னே சென்று அணியை வழி நடத்த ரோஹித் அவரை அனுப்பினார். இளம்வீரரை ஊக்குவிக்கும் விதமாக ரோஹித் ஷர்மா செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.