சிக்கன் தான் உயிர் மூச்சு.. 40 நாள்ல உலக FAMOUS ஆன நபர்.. காரணத்தை கேட்டு சிலிர்த்த மக்கள்..!! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஒருவர் 40 நாட்களும் முழு வறுத்த கோழியை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தும் வந்திருக்கிறார் அவர். இதற்கு அவர் சொல்லிய காரணத்தை கேட்டு மக்கள் ஆச்சர்யமடைந்திருக்கின்றனர்.
சோசியல் மீடியாவின் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நிகழும் சிறிய விஷயங்கள் கூட, அடுத்த வினாடியே உலகம் முழுவதும் தெரிந்துவிடுகிறது. சோசியல் மீடியா மூலமாக பிரபலமானவர்களின் பட்டியல் மிக நீளமானது. அந்த லிஸ்டில் தற்போது சேர்ந்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த அலெக்சாண்டர் டோமின்ஸ்கி என்பவர்.
அமெரிக்காவின் ரோடி ஐஸ்லேண்டில் பிறந்தவரான அலெக்சாண்டர் டோமின்ஸ்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிலடெல்பியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறார். உணவகம் ஒன்றில் வேலைபார்த்து வரும் அலெக்சாண்டர் டோமின்ஸ்கிக்கு வெகுநாட்களாகவே மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆனால், எப்படி என்று அவருக்கு புலப்படவில்லை.
இப்படியான சூழ்நிலையில் தான் சிக்கன் சேலஞ்ச் எடுக்க முடிவெடுத்திருக்கிறார் அலெக்சாண்டர் டோமின்ஸ்கி. அதாவது 30 நாட்களுக்கு முழு வறுத்தகோழியை சாப்பிடுவது என முடிவெடுத்திருக்கிறார் இவர். இதனை ஆவணப்படுத்த நினைத்த அலெக்ஸ்சாண்டர் ஒவ்வொரு நாளும் தான் சிக்கன் சாப்பிடுவதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார். ஆனால், இந்த பயணம் அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை என்கிறார் இவர். ஆரம்பத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை என்றாலும், போகப்போக உடலில் அசவுகர்யங்கள் ஏற்பட்டதாகவும் ஆனாலும் தனது சேலஞ்சை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
சிக்கனை மட்டுமே சாப்பிட்டு வந்ததால் 16 பவுண்ட் வரை அவரது எடை குறைந்திருக்கிறது. இதுபற்றி பேசிய அவர்,"இது வலியுடன் கூடிய ஒரு பயணம். மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க என்னால் முடிந்த வகையில் முயன்றேன்" எனச் சொல்லியிருக்கிறார். 30 நாள் சேலஞ்சை முடித்த பிறகு, இதனை மேலும் தொடர நினைத்திருக்கிறார் அவர்.
ஆகவே 40 நாட்கள் தொடர்ந்து சிக்கன் சாப்பிட முடிவெடுத்த அலெக்ஸ்சாண்டர் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தனது சுவையான பயணத்தை முடித்திருக்கிறார். தன்னுடைய 40 வது நாள் சிக்கன் சாப்பிடும் நிகழ்வை மக்களுடன் கொண்டாட நினைத்த அவர், சாலைகளில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார். அதில், தன்னுடைய 40 வது நாள் சிக்கன் சாப்பிடும் நிகழ்வை காண வரும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அவர்.
இதனை ஏற்று டெலாவர் பகுதியில் கூடிய மக்களிடையே தனது 40 வது நாள் சிக்கனை சாப்பிட்டிருக்கிறார் அவர். அப்போது கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கூச்சலிட, அவர்களுடன் இணைந்து ஜாலியாக பாடியிருக்கிறார் அலெக்ஸ்சாண்டர். இந்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களை மகிழ்விக்க சிக்கன் சேலஞ்சை துவங்கிய அலெக்ஸ்சாண்டர் இறுதியில் அதில் வெற்றிபெற்றிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
YEEEEEAHHHHHHH pic.twitter.com/HNsjaNI1Xh
— River (@Punk_Aizawa) November 6, 2022