வானத்தில் இருந்து விழுந்த 'மர்ம' உலோக பொருள்??.. "ரோடு சைடு'ல வந்து கெடந்துருக்கு.." குழப்பத்தில் போலீசார்.. அதிர்ச்சி பின்னணி
முகப்பு > செய்திகள் > உலகம்வானத்தில் இருந்து மர்ம உலோக பொருள் ஒன்று, கீழே விழுந்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
US பகுதியை அடுத்த Maine என்னும் பகுதியில், வழக்கம் போல மக்கள் இயங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் போலீஸ் அதிகாரியான Craig என்பவரும் நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென அவரது முன்பே, சுமார் 6 முதல் 7 பவுண்டுகள் கொண்ட பெரிய உலோக பொருள் ஒன்று வானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.
Craig நின்ற இடத்தில் இருந்து, 7 அடி தூரத்தில் ஒரு மர்ம உலோக பொருள் வானத்தில் இருந்து விழுந்த நிலையில், அங்கிருந்த ஒரு சிலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு வேளை, Craig சற்று மாறி நின்றிருந்தால், நிலைமையே தலை கீழாக மாறி இருக்கலாம். அதுவும் பல ஆயிரம் அடி தூரத்தில் இருந்து, 6 பவுண்டு எடையுள்ள பொருள் வரும் போது, நிச்சயம் அது ஒருவரின் உடலில் பட்டு, பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
உருளை வடிவில் பெரிதாக இருந்த உலோக பொருள் வானத்தில் இருந்த விழுந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கே நின்று கொண்டிருந்த Craig-ஐ பெரிய அளவில் பாதித்தது என்றும் மற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானத்தில் இருந்து விழுந்ததால், அப்போது அவ்வழியே சென்ற ஏதாவது விமானத்தில் இருந்து விழுந்ததாக கூட இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். அன்றைய தினத்தில், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உலோக பொருள் விழுந்த இடமானது, அங்குள்ள சட்டமன்றம் நடைபெறும் சமயத்தில், போராட்டங்கள், ஊர்வலங்கள் செய்தியாளர்கள் கூடி நிற்கும் இடமாகும் என்றும், உலோக பொருள் விழுந்த போது, அங்கே மக்கள் இல்லாமல் இருந்தது அதிர்ஷ்டமான ஒன்றாக அமைந்தது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மர்ம உலோக பொருள் தொடர்பான புகைப்படம், தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வரும் நிலையில், விமானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்பட்டாலும், இது எந்த விமானத்தில் இருந்து விழுந்தது என்பதை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இது பற்றி தொடர்ந்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.